திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் கடந்த 14ம் தேதி 84 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15 ந்தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செங்குளம் காலனி கிராம நிர்வாக அலுவலர் பாலக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
