தமிழக சட்ட சபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். சீமான் போட்டியிட்டதால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றது. சீமான் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், சீமான் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார். சீமான் மொத்தமாகவே 17,926 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அதேபோல் தவெக வேட்பாளர் சுமார் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
