திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மில் காலனி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (வயது 84) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்த 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
இதேபோல், திருவெறும்பூர் போலீசார் நடத்திய சோதனையில், காக்கன் காலனி பகுதியில் ஹான்ஸ் விற்பனையில் ஈடுபட்ட மீனாட்சி (48) மற்றும் நொச்சிவயல் புதூர் ரயில்வே கேட் பகுதியில் ஹான்ஸ் விற்பனை செய்த குண்டூர் பகுதியை சேர்ந்த சத்யா (31) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ. 4,500 மதிப்பிலான 135 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், நவலப்பட்டு பகுதியில் உள்ள எம்.ஐ.இ.டி சோதனைச் சாவடி அருகே புகையிலை விற்ற பொன்மலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் அந்தந்த காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

