Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தலைமறைவாக இருந்த நாசிக் மதமாற்ற கும்பல் தலைவி நிடா கான் கைது

நாசிக்கில், டி.சி.எஸ்., நிறுவனத்தின் பி.பி.ஓ., அலுவலகம் உள்ளது.

இங்கு பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கடந்த பிப்ரவரியில் புகார் எழுந்தது. இதையடுத்து உண்மை நிலவரத்தை கண்டறிய நாசிக் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

இதன்படி, அந்த அலுவலகத்திலேயே துாய்மை பணியாளர்களாக நான்கு பெண் போலீசார் உட்பட பலர் பணியில் சேர்ந்தனர்.இந்த ரகசிய விசாரணையில், தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற மதபோதகருடன் குற்றஞ்சாட்டப்பட்ட டி.சி.எஸ்., நிறுவன ஊழியர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் கைதான, ‘டீம் லீடர்கள்’, சக ஊழியர்களை முஸ்லிம் நடைமுறைகளை பின்பற்றும்படி தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தது தெரியவந்தது. இதேபோல் குற்றஞ்சாட்டப்பட்ட மனித வள மேலாளரான நிடா கான் தலைமறைவானார்.

25 வயதான நிடா கான், 2021ல் டிசிஎஸ் நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பணியில் சேர்ந்து இருக்கிறார். பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றம் தொடர்பான ஒன்பது புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதில் நிடா கான் முக்கிய குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது.

இதன் பிறகு டிசிஎஸ் கம்பெனியில் இருந்து நிடா கான் இடை நீக்கம் செய்யப்பட்டார். 25 நாட்களாக தலைமறைவாக இருந்த நிடா கான் இன்று (மே 08) சத்ரபதி சம்பாஜி நகரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!