Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விபத்தில் பெண் பலி… திருச்சியில் சம்பவம்

விபத்தில் பெண் பலி.. பரிதாபம்..

திருச்சி கே கே நகர் ரெட்டி நகரை சேர்ந்தவர் எழிலரசி. இவரது தாய் கிரேசி (வயது55) நேற்று முன்தினம் இவர் ஜஸ்வின் ஜோஸ்வா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உடையான் பட்டியிலிருந்து கேகே நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார் அப்போது அதே திசையில் கேகே நகரை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது .இதை யடுத்து சரக்கு வாகனம் தென்றல் நகர் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டு மைதானம் அருகே வந்தபோது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த கிரேசியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி தெற்கு போக்குவரத்து பிரிவு போலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கத்தி முனையில் வியாபாரியிடம் பணம் பறித்த வாலிபர்

திருவண்ணாமலை மாவட்டம் விரையூரை சேர்ந்தவர் விஷால் (வயது 21) இவர் கே சாத்தனூர் ரெயில்வே கேட் அருகில் பழங்கள் விற்றுக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த பொன்மலை மலையடிவாரம் பகுதியை சேர்ந்த பிரசன்னா 30 என்பவர் விஷாலிடம் பணம் கேட்டு உள்ளார் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் இதை எடுத்து பிரசன்னா தன் மறைத்து வைத்த கத்தியை காட்டிமிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

error: Content is protected !!