வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
திருச்சி குமரன் நகர் வயலூர் சாலையை சேர்ந்தவர் சாந்தி (வயது 58). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் உறையூர் ராமலிங்க நகரில் உள்ள தனது சகோதரியின் ராஜலட்சுமி வீட்டை பராமரித்து வந்தார். ராஜலட்சுமி கடந்த 4 -ந்தேதி சென்னைக்கு சென்றுள்ளார். இதனால் சாந்தி சம்பவத்தன்று சகோதரியின் வீட்டை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டில் முன்பக்க இரும்பு கிரில் கேட்டு மற்றும் பூட்டு உடைக்கப்பட்டு இருந்து. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 1 சவரன் தங்க நகை, 1 கிலோ வெள்ளி, ரூ. 20, 000 பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சாந்தி உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டிற்குள் சடலமாக கிடந்த மூதாட்டி.. உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
திருச்சி ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் பகுதியை சேர்ந்தவர் கோமதி (வயது 70.) இவரது மகன் மற்றும் மகள் இரண்டு பேரும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இவர் இங்கு தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் கடந்த இரண்டு மாதமாக லால்குடி பகுதியை சேர்ந்த ராஜாத்தி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6-ந் தேதி ராஜாத்தி வேலை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. தொடர்ந்து வீட்டு கதவை தட்டிய போது கோமதி கதவை திறக்கவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாத்தி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் இங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கோமதி தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார் இதை தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் எப்படி இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாத்திர வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை
திருச்சி திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 76 இவர் சைக்கிள்களில் பாத்திரங்கள் விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சிறுநீரக பாதிப்பு உள்ளதால் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்த நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பற்றி பிரதேச பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து செயல்படுத்து வருகின்றன
அண்ணன் தம்பி மீது சரமாரி தாக்குதல்.. 3 வாலிபர்கள் கைது
திருச்சி எடமைப்பட்டி புதூர் அன்பிலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் வயது 46 பெயிண்டர். சம்பவத்தன்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் இவரின் வீட்டின் அருகே நின்று சத்தமாக பேசிக் கொண்டிருந்தனர் பின்னர் கதிரேசனின் இளைய மகன் சரவணகுமார் இது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் மறுநாள் அந்த கும்பல் கதிரேசனின் வீட்டிற்கு வந்து சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டி சாவியால் தாக்கியுள்ளனர். கதிரேசனின் மூத்த மகனான சரவணகுமார் என்பவர் இதனை தடுக்க முயன்ற போது அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅனுப்பி வைத்தனர். இதுகுறித்து கதிரேசன் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் 19 சாரம் 22 பிரகாஷ் 20 ஆகிய மூவரை கைது செய்தனர் மேலும் பிரபாகரன் என்பவரை தேடி வருகின்றனர்
நண்பர்களை தாக்கி நகை பணம் கொள்ளை.. 5 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓட்டம்
திருச்சி ஏர்போர்ட் அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் சையது முகமது ஹாக்கிம் (45). இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களை வெளிநாடுகளுக்கு யாத்திரைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவரது நண்பர் ஒருவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். மலேசியாவில் இருந்து விமானத்தின் மூலம் திருச்சிக்கு சென்ற ஒருவரிடம் தனது நண்பரிடம் 50 கிராம் தங்கச் சங்கிலியை கொடுத்து அனுப்பி உள்ளார் நேற்று முன்தினம் நள்ளிரவு சையது முகமது ஹாக்கிங் மற்றும் முகமது கோஸ் ஆகிய இருவரும் தங்கச் சங்கிலி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றனர் பின்னர் இருவரும் தங்கச் சங்கிலியை வாங்கி விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூன்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வந்தனர் மர்மநபர்கள் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை காட்டி மிரட்டினர். பின்னர் அங்கு வந்த மேலும் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு வந்து அரிவாளால் மற்றும் பல்வேறு ஆயுதங்களால் தாக்கி 50 கிராம் தங்கச் சங்கிலி மற்றும் செல்போனை பறித்தனர். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பரான முகமது கோஸ் என்பவரை தாக்கி அவரிடம் இருந்த ரூ. 17,000 பணத்தை திருடி தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த அவர்களை அங்கிருந்திருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சையது முகமது ஹாக்கிங் விமான நிலைய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 5 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
