திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு.
திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்குச்சீட்டால், தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாக பெரிய கருப்பன் தரப்பில் வாதிட்டப்பட்டது. தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால் தேர்தல் வழக்காகத்தான் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் இவ்வழக்கில் தெரிவித்துள்ளது.
