Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டூவீலரில் லிப்ட் கேட்டு தங்க செயினை பறித்த நபர் கைது

திருச்சி அரியமங்கலம் தென்றல் நகரைச் சேர்ந்தவர் ஐயப்பன் 35. காந்தி மார்க்கெட்டில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தன் வீட்டிலிருந்து வேலைக்கு டூவீலரில் சென்றார் அப்போது அப்பகுதியில் மர்ம நபர் ஒருவர் இவரிடம் லிஃப்ட் கேட்டு டூவீலரில் ஏறினால் தன்னை கோட்டை ரயில் நிலையம் அருகே இறக்கி விடும்படி கேட்டார் தொடர்ந்து அவர் அங்கு இறக்கி விட்டார் அப்போது அந்த மர்ம நபர் தான் ஏற வேண்டிய ரயில் புறப்பட்டு சென்று விட்டதாகவும் தன்னை சிங்காரத்தோப்பு அருகே விட்டு விடும்படி அவரிடம் கேட்டார் தொடர்ந்து அவர் அந்த மர்ம நபரை சிங்காரத்தோப்பு அருகே இறக்கி விட்டார் பின் அந்த மர்ம நபர் ஐயப்பன் கழுத்தில் அணிந்து இருந்த ஆறு பவுன் தங்கச் சீனி பையன இடைவெளியின் போது திருடியது தெரிய வந்தது இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து செயினை திருடிய அந்த மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தினர் இதில் அவர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் இடையக்குறிச்சியை சேர்ந்த வீரமணி 45 என்பது தெரிந்தது போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தங்கச் செயினை மீட்டனர்.

error: Content is protected !!