திருச்சி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலக பயன்பாட்டில் இருந்த, முதிரா நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பொலிரோ வாகனம் வரும் ஜூன்.4-ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் முன்வைப்புத்தொகை ரூ.10,000 செலுத்தி ஏலம் நடைபெறும் அன்று காலை 10 மணிக்கு டோக்கன் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
