Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதிய அரசை வரவேற்று .. தஞ்சை கலெக்டருக்கு இனிப்பு வழங்கிய விவசாயிகள்

புதிதாக பொறுப்பேற்ற அரசு வரவேற்றும் உழவர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர்க்கு இனிப்புகள் வழங்கினர்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன் வழங்க வேண்டும் விவசாயிகள் வேண்டுகோள் வைத்து மனு அளித்தனர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட உள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்ற அரசு விவசாய கூட்டுறவு கடன் மற்றும் நகை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக புதிய கடன் வழங்க வேண்டும் தூர்வாரும் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கூட்டத்திற்கு இடையே வந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊரணிபுரம் பகுதியில் பொதுமக்கள் மாணவர்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் தமிழக அரசு தற்போது டாஸ்மார்க் கடை மூட உத்தரவிட்ட நிலையில் ஊரணிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடையை அகற்ற கோரிக்கை மனு அளித்தனர்.

error: Content is protected !!