திருச்சி மத்திய சிறையில் புகார் வந்தால் கைதிகள் அறையில் போலீஸ் அதிரடி சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் திருச்சி மத்திய சிறையில் திடீரென்று மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சிறை வளாகத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுதுஒவ்வொரு கைதிகள் அறைக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்பொழுது 20 ஆம் எண் அறையில் சோதனை செய்தபோது அங்குள்ள கைதிகள் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நவீன் குமார் (வயது 25)சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பிரசன்னா (வயது 27) மதுரை சேர்ந்த பாண்டீஸ்வரன் (வயது 19) ஆகியோரை சிறைத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்பொழுது மேற்கண்ட மூன்று பேரும் அவர்களுடைய ஆசனவாயில் கஞ்சாவைமறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை கண்டுபிடித்து 37 கி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து கேகே நகர் போலீசில் சிறை அதிகாரி வெங்கட சுப்பிரமணியன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கேகே நகர் போலீசார் கைதிகள் நவீன் குமார், பிரசன்னா, பாண்டீஸ்வரன் ஆகியோர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
