Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1280 குறைவு

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் தற்போது மீண்டும்  சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது தங்கம். மேலும், இந்தியர்களின் முக்கிய சேமிப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அரிய உலோகங்களில் ஒன்றான தங்கத்தின் மதிப்பானது, உலக சந்தையில் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருகிறது. முதலீடு என்றாலே பங்குச்சந்தை தான் என்ற நிலையானது கடந்த 2 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது. ஏனெனில் பங்குச்சந்தைகள் அடி வாங்கும்போது முதலீட்டாளர்கள் உடனடியாக தங்கத்தின் மீது முதலீடுகளை திருப்பி விடுகின்றனர். இதனால் தங்கத்தின் மதிப்பு விறுவிறுவென உயர்ந்துகொண்டே போகிறது. 

இந்நிலையில் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.1280 குறைந்து மீண்டும்  ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 குறைந்துள்ளது.ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,18,120க்கும், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,765க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!