Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்..ஈபிஎஸ் ஈகோவை விட வேண்டும்

அதிமுகவிலிருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிவித்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள செம்மலை எடப்பாடியின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படாத போதிலும் சேலத்தில் தீவிர பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில், திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது எடப்பாடி பழனிசாமியின் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. அவர் கூறியதாவது..

ஈபிஎஸ் உள்ளிட்டொர் ஈகோவை விட வேண்டும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. கட்சியை காப்பாற்ற வேண்டும். தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்த நிகழ்வுகளால் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளேன்.வேறு கட்சியில் இணையும் எண்ணம் இல்லை. என் எதிர்காலத்தை காலம் தீர்மானிக்கும். அதிமுக பலவீனமாகிவிட்டது என பலலட்ச தொண்டர்கள் வேதனை அடைந்துள்ளனர். அனைவருக்கும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அதிமுகவில் சதி ஏதும் இருப்பதாக நினைக்கவி்ல்லை என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!