Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்சாரம் தாக்கி தம்பதி உட்பட 3 பேர் பலி…பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மழையின் காரணமாக மின்கம்பி அறுந்து விழுந்ததில் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கருப்பையா மற்றும் அவரது மனைவி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

முதலில் கருப்பையா மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்ற மற்ற இருவர் மீதும் மின்சாரம் தாக்கி அவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மழைக்காலங்களில் மின்கம்பிகள் அறுந்து கிடப்பதைக் கண்டால் உடனே மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரம் தாக்கிய ஒருவரை எக்காரணம் கொண்டும் நேரடியாகக் கைகளால் தொட்டு காப்பாற்ற முயலக்கூடாது; காய்ந்த மரக்கட்டை, பிளாஸ்டிக் போன்ற மின்சாரத்தைக் கடத்தாத பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது உடனடியாக முதன்மை மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

error: Content is protected !!