எஸ்டிடியு தொழிற்சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய மாநில தலைவராக ஹசன் பாபு, பொதுச் செயலாளராக ரவூப் நிஸ்தார், துணைத் தலைவர்களாக முகமது ஆசாத், அப்துல் சிக்கந்தர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கு முன்னாள் மாநில நிர்வாகிகள் நினைவுப் பரிசுகளை வழங்கி, தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகள், நலத்திட்டங்கள் மற்றும் எதிர்காலப் போராட்டக் களங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது
