Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி கோரி வலியுறுத்தல்

கரூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பாஸ்மாக மதுபான கடை கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்துச் சங்கங்களின் சார்பில் 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு டாஸ்மார்க் மதுபான கடையில் பணியாற்றியவர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப்பணி வழங்கிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்துச் சங்கங்களின் சார்பில் 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் LPF மாவட்டத் தலைவர் அண்ணாவேலு தலைமையில் நடைபெற்றது.

இதில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு அரசு காலிப்பணியிடங்களில் கல்வித் தகுதிக்கேற்ப மாற்றுப் பணி வழங்கிடுக, காலி மது பாட்டில்களை சேகரிக்கும் பணியை கடை ஊழியர்கள் மீது சுமத்தாதே. தனி பணியாளர்கள் நியமித்திடுக, கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திடுக, உடைந்து வரும் பாட்டில்களுக்கான இழப்பீட்டை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்,மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு கட்டிட வாடகை, மின் கட்டணம், குளிர்சாதன பெட்டிகள் அரசே முழுமையாக வழங்கிடுக, பணி நிமித்தமாக டாஸ்மாக் அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து செலவை அரசே வழங்கிடவேண்டும்விற்பனைக்கும், காலி பாட்டில் பெறுவதற்கும் 10. 20, 50 ரூபாய்கள் நிர்வாகம் வழங்கவேண்டும் அல்லது வெளியிலிருந்து பெறுவதற்கான கமிஷனை நிர்வாகம் வழங்க வேண்டும் மக்கள் நலன் கருதி கரூர் மாவட்டத்தில் மூடப்பட்ட 8 கடைகளுக்கு அருகாமை கடைகளில் விற்பனை கூடுவதால் ஊழியர்களின் பணிச்சுமையை போக்கிட தேவையான ஊழியர்களை நியமித்திடுக என 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

error: Content is protected !!