Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் 17வயது சிறுவன் வெட்டிக்கொலை.. பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பெருமாநாடு பகுதியில், 17 வயது சிறுவனான அன்புச்செல்வன் என்பவர் ஒரு கும்பலால் சுற்றிவளைத்து கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட அன்புச்செல்வன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அந்த வழக்கின் விசாரணைக்காக அவர் ஓசூரில் இருந்து தனது சொந்த ஊரான பெருமாநாட்டுக்கு வந்திருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அன்னவாசல் காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!