Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கின்யுவானில் எரிவாயு வெடித்ததில் சிக்கி 82 தொழிலாளர்கள் பலி

சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணம், சாங்ஜி (Changzhi) நகருக்கு உட்பட்ட கின்யுவான் பகுதியில் உள்ள லியுஷென்யு (Liushenyu) நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து மற்றும் பெரும் உயிர்ச்சேதம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

கார்பன் மோனாக்சைடு வாயு வழக்கத்தை விட மிக அதிகமாகக் கசிந்து, அதன் காரணமாக ஏற்பட்ட இந்த பயங்கர எரிவாயு வெடிப்பு விபத்தில் சிக்கி 82 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பது ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

தற்போது சுரங்கத்திற்குள் மாயமாகியுள்ள எஞ்சிய 9 தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.

விபத்து குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி சியாங் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக சுரங்க நிர்வாக அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

error: Content is protected !!