திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் குளுந்தாளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகளும், வீரர்களும் கலந்து கொண்டனர். ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டாலும் ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிச் சென்றது. இதனை ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.
