Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை, 25,000 பணம் மற்றும் லேப்டாப் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் சிங்களாந்தபுரம் சாலையில் உள்ள 3வது கிராஸ் பகுதியில் வசித்து

வரும் ரமேஷ் (46) என்பவர் மருந்து விற்பனை (Medicine Marketing) தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி சுசித்ராவுடன் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, அவரது உறவினர் விஜய் கணேசனின் குழந்தைகளுக்கு வயலூர் முருகன் கோவில் பகுதியில் மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதால் அங்கு சென்றுள்ளனர்.

பின்னர் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் வெளிக்கதவு பூட்டியிருந்த நிலையில், மெயின் டோரின் மரக்கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 5சவரன் மதிப்பிலான
நெக்லஸ், மோதிரம், தோடு மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் லேப்டாப் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரமேஷ் இன்று துறையூர் காவல் நிலையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு உதவி ஆய்வாளர் தினேஷ் சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!