சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.84 லட்சத்தை மோசடி செய்தனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (72). இவரது உறவினர்களான காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி(60), கலைவாணி (33) ஆகியோர் சாலமங்கலம் பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி விஸ்வநாதனிடம் ரூ.84 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டனர்.
பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறி இருவரும் அதன்பிறகு பணத்தை தராததால் விரக்தி அடைந்த விஸ்வநாதன், எலி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து படப்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
