விவசாயியின் மகள் இந்திய விமானப்படை அகாடமியின் மெரிட் பட்டியலில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது. பஞ்சாபை சேர்ந்த மெஹக்ப்ரீத் கவுர், எளிய குடும்பத்தில் பிறந்த போதிலும், இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என ஆர்வம் கொண்டுள்ளார். ஏழ்மை பாதித்த போதிலும் கவுர் தன்னுடைய விடாமுயற்சி, கடின உழைப்பால் முதல் இடம் பிடித்து பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளார்.
