Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரூ.634 கோடி லஞ்ச புகார்.. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இந்த விவகாரம், தற்போதைய அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களை நிரப்புவதில் ரூ.634 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வங்கி மோசடி வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, அமைச்சரின் சகோதரர் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை, அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. அதில் ஒரு பணியிடத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்பட்டது.

அதிமுக எம்பி இன்பதுரை தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “முறைகேடு நடந்ததற்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் வலுவாக உள்ளதால், இது குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்” என பிப்ரவரி 20, 2026 அன்று அதிரடி உத்தரவிட்டது.

இந்நிலையில் ரூ.634 கோடி லஞ்ச புகார் – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை.

error: Content is protected !!