கரூர் ஜவகர் பஜாரில் 50 பைசா நாணயத்திற்கு சுடிதார் வழங்கும் சலுகை – பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு, பாதி பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
கரூர், ஜவகர் பஜார் பகுதியில் உள்ள மஹாராணி துணிக்கடை சார்பில், ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் 50 பைசா நாணயம் வழங்கினால் ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான பெண்களுக்கான சுடிதார் இலவசமாக வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பை பார்த்த ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே 50 பைசா நாணயங்களுடன் கடை முன்பு திரண்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கடை நிர்வாகம் 50 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால்,டோக்கன் கிடைக்காத பலர் ஏமாற்றத்துடன் கடை முன்பே காத்திருந்தனர். மேலும், 50 பைசா நாணயத்திற்கு சுடிதார் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நம்பி தொடர்ந்து பொதுமக்கள் கடை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.
