கரூரில் உலக இசை தினத்தை முன்னிட்டு 2 மாணவிகள் தொடர்ந்து 10 மணி நேரம் வீணை வாசித்து புதிய உலக சாதனை படைத்தனர்
கரூர் நாரதகான சபாவில் உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை தமிழ் இசைக் கல்லூரி மாணவி ஸ்ரீ விஷ்வ ஜனனி, கரூர் தனியார் பள்ளி 12ம் வகுப்பு மாணவி நேத்ரா ஆகியோர் புதிய

உலக சாதனையாக தொடர்ந்து 10 மணி நேரம் வீணை வாசிக்கும் நிகழ்வை துவங்கியுள்ளனர். இவர்களுடன் 22 மாணவிகள் குழு குழுவாக அமர்ந்து வீணை வாசிக்கும் இரண்டாவது சாதனை நிகழ்வும் துவங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடம் அல்லது 4 மணி நேரத்திற்கு 20 நிமிடம் ஓய்வு எனும் அடிப்படையில் இச்சாதனை நிகழ்வு காலை 8.15 மணிக்கு தொடங்கி மாலை 6.15 மணிக்கு நிறைவு தொடர்ந்து10 மணி நேரம் தொடர்ந்து வீனண இசைத்து சாதனை படைத்தனர்
இதில் சாமி பாடல்கள், சினிமா பாடல்களை மாணவிகள் வீணையில் வாசித்து வருகின்றனர். இசை ஆர்வலர்கள், பெற்றோர்கள் ரசித்து உற்சாகப்படுத்தினர்.
மேலும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ரெக்கார்ட்ஸ் இந்தியா அகாடமி ஸ்ரீ விஸ்வா வீணா அகாடமி இணைந்து டிராகன் ஜெட்லி கின்னஸ் உலக சாதனையாளர், நடுவர் மற்றும் ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.
