Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை அருகே கொடூரம்: வாங்கிய கடனுக்காக ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு

தஞ்சாவூர் அருகே கொடூரம்: வாங்கிய கடனுக்காக சிறுவனை கொத்தடிமையாக ஆடு மேய்க்க வைத்த நபர் மீது போலீசில் புகார்

தஞ்சாவூர் அருகே திருமலை சமுத்திரம் பகுதியில் வாங்கிய கடனுக்காக சிறுவனை ஆடு மேய்க்கும் தொழிலை கொத்தடிமையாக ஈடுபடுத்தியவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொத்தடிமையாக இருந்த சிறுவனும் மீட்கப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ஜாய்ஸ் மேரி. இவர் திருமலை சுமந்திரன் தெற்கு தெருவை சேர்ந்த வெங்கடாஜலம் என்பவரின் மகன் ராஜ்குமாரிடம் (55) ரூ.1 லட்சம் பணத்தை கடனாக வாங்கி உள்ளார். ஆனால் இந்த பணத்தை ஜாய்ஸ் மேரியால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதையடுத்து ராஜ்குமார், ஜாய்ஸ் மேரி கொடுக்க வேண்டிய பணத்திற்காக அவரது மகன் ஹரிஷ் ராஜை(16) ஆடுகள் மேய்ப்பதற்காக கொத்தடிமையாக அழைத்துச் சென்றார். தொடர்ந்து திருமலைசமுத்திரம் பகுதியில் ஹரிஷ் ராஜ் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருப்பதை சமூக ஆர்வலர்கள் பார்த்து அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ராஜ்குமார் தன் அம்மா வாங்கிய பணத்திற்காக தன்னை ஆடுகள் மேய்க்கும் பணிக்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார், ஆகியோர் ஹரிஷ் ராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை மீட்டு குழந்தையின் நல காப்பகத்தில் சேர்த்தனர்.
மேலும் ஹரிஷ் ராஜை ஆடுகள் மேய்க்க கொத்தடிமையாக அழைத்து வந்த ராஜ்குமார் மீது வல்லம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!