Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“போலீஸ் வேலைக்கு போக முடியாதோ?” – எதிர்காலக் கனவு கலைந்த வேதனையில் 18 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி கலைஞர் நகரில் வசிப்பவர் லட்சுமணன். இவரது மகள் திவ்யா (18). இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் கல்லூரியில் என்.சி.சி. மாணவியாக உள்ளார். அங்கு இவர் ஒழுங்கீனமாக நடந்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக இனிமேல், தான் போலீஸ் வேலைக்கு போக முடியாது என்று கருதி திவ்யா மன வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் தனது வீட்டில் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!