Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

சி.வி.சண்முகம் வீட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகள்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகத்தை, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் சில முடிவுகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருந்து வருவதாகத் தகவல் வெளியாகி வந்தது. குறிப்பாக, வட தமிழகத்தில் அதிமுகவின் பலத்த முகமாகப் பார்க்கப்படும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கட்சித் தலைமையின் தற்போதைய செயல்பாடுகளில் அதிருப்தியடைந்து, கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்று விலகியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அல்லது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ன்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள சி.வி.சண்முகத்தின் இல்லத்திற்கு அதிமுகவின் மிக முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் இன்று திடீரென வருகை தந்தனர். இந்தச் சந்திப்பில் அதிமுகவின் முன்னணித் தலைவர்களான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைமை மீது அதிருப்தியில் உள்ள சி.வி.சண்முகத்தை சமாதானப்படுத்துவதற்காக இந்த மூத்த நிர்வாகிகள் வந்துள்ளனரா அல்லது கட்சியின் எதிர்கால வியூகங்கள் குறித்து ரகசியமாக ஆலோசிக்க வந்துள்ளனரா என்ற விவாதம் எழுந்துள்ளது. மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒரே நேரத்தில் சி.வி.சண்முகம் வீட்டில் கூடியிருப்பதால், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. சுமார் சில மணி நேரங்கள் நீடித்த இந்த மூடிய அறை ஆலோசனையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

error: Content is protected !!