திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி திருவெறும்பூர் காவல்துறை ஏஎஸ்பி பனாவத் அரவிந்த் பதவி உயர்வு பெற்று, திருச்சி மாநகர காவல்துறை துணைஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மணிவாசகம் வெளியிட்டுள்ளார்.
