Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சியில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இப்பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே ஆகும். இருப்பினும், த.வெ.க.வின் ஆட்சி நீடிக்கும் வரை இப்பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான பொறுப்பாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க பதவிக்கு, முதல்-அமைச்சர் விஜய் தனது திரைப்படத்தைத் தயாரித்தவருக்கு வாய்ப்பளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும், நியமிக்கப்பட்டுள்ள வெங்கட நாராயணா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது இச்சரச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!