திருச்சி தாராநல்லூரில் அமைந்துள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 16-ந் தேதி மறுகாப்பு கட்டி அம்மனை மந்தைக்கு அழைத்து வந்தனர். பின்னர் தினமும் அம்மன் பூதவாகனம், சிம்மவாகனம், அன்னவாகனம், யானை வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். நேற்று முன்தினம் திருத்தேர் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை கலைஞர்நகர் மாகாளியப்பர் கோவில் வளாகத்தில் 1008 குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நேதாஜி இளைஞர் சமூகநல அறக்கட்டளை, எஸ்.எம்.வி.எஸ். நண்பர்கள் சிவகணேசன், பிரசாந்த் பாண்டியராஜ், செந்தில், ஜெகதீஸ், முத்துராமலிங்கம், வடிவேல், சிவராமன் மற்றும் பலர் செய்திருந்தனர்.
