Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

ஆட்டோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருட்டு.. திருச்சியில் பரபரப்பு

வாலிபர் கைது

திருச்சி ஜூன் 27- திருச்சி வரகனேரி சந்தனபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 58 )ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 12 ந் தேதி ரூபாய் 50 ஆயிரம் பணத்தை எடுத்து அவரது ஆட்டோவின் டாஸ் போர்டில் வைத்து விட்டு கண்டோன்மெண்ட் பகுதிக்கு சென்றார். பிறகு மீண்டும் ஆட்டோவை எடுத்துக் கொண்டு கல்பாளையம் சந்தனபுரம் ரேசன் கடை அருகில் சென்று ஆட்டோவை நிறுத்திவிட்டு வெளியே சென்றார். அப்பொழுது தனியாக நின்ற ஆட்டோவில் இருந்த பணத்தை வாலிபர் திருடிக் கொண்டிருந்தார். பிறகு அங்கு வந்த செல்வராஜ் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் சென்று அந்த வாலிபரை பிடித்து காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்தார். பிறகு போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை செய்த பொழுது அவர் பெயர் சையது முஸ்தபா (வயது 19) கல்பாளையத்தை சேர்ந்தவர் என தெரிய வந்தது இதையடுத்து காந்தி மார்க்கெட் போலீசார் சையதுமுஸ்தபாவை கைது செய்து அவரிடம் இருந்து ரூ10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!