Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

மணப்பாறை அருகே குடும்ப தகராறு.. மனவேதனையில் முதியவர் தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கீழப் பொய்கைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னக்கண்ணு (63) இவரது மனைவி வெள்ளை கண்ணு (52). இந்த தம்பதியருக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளை கண்ணு கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அதைத் தொடர்ந்து சின்ன கண்ணு அவரை குடும்பம் நடத்த வருமாறு செல்போனில் அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சின்ன கண்ணு யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருந்தபோதிலும் சின்ன கண்ணு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெள்ளை கண்ணு கொடுத்த புகாரின் அடிப்படையில் புத்தாநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!