திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிந்தாமணி பகுதியில் உள்ள சிறார்கள் இல்லத்தில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, சிறார்களுக்கு காலை உணவை வழங்கினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
