Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ராயபுரம் மகளிர் காவல் நிலை​யத்​தில் ஆய்​வாள​ராகப் பணி​யாற்​றிய​வர் ஷீலா மேரி. இவர் தனது உறவின​ரான பிரபு மணி மூல​மாக ஒரு நிறு​வனத்தை தொடங்கி அதன் மூலம் தங்​கத்​தில் முதலீடு செய்​தால் அதிக லாபம் சம்​பா​திக்​கலாம், குறைந்த விலை​யில் தங்க காசுகள் வாங்​கலாம், வீட்டு மனை​கள் குறைந்த விலை​யில் வாங்​கித் தரு​கிறோம் என பல்​வேறு முதலீட்டு திட்​டங்​களை அறி​முகம் செய்​துள்​ளார்.

கடந்த 2023 மற்​றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்​கும் மேற்​பட்​டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறு​வனத்​தில் முதலீடு செய்​துள்​ளனர். பிரபு மணி பெரும்​பாலும் ஆய்​வாளர் ஷீலா மேரி​யின் காவல்​துறை வாக​னத்​திலேயே வைத்​து, மக்​கள​வைத் தேர்​தல் நேரத்​தில் தங்​கக் காசுகளை வழங்​கி​யுள்​ளார்.

இதனால் நம்​பிக்கை ஏற்​பட்டு மேலும் நூற்​றுக்​கும் மேற்​பட்​டோர் முதலீடு செய்​துள்​ளனர். குறிப்​பாக போலீ​ஸாரும், போலீஸ் அதி​காரி​கள் பலரும் கோடிக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், இந்​நிறு​வனத்தை 2024 இறு​தி​யில் மூடி​விட்டு பிரபுமணி தலைமறை​வாகி​விட்​டார். இவரிடம் முதலீடு செய்து ஏமாற்​றப்​பட்​ட​வர்​கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தனர்.

மொத்​தம் ரூ.20 கோடி வரை இழந்​துள்​ள​தாக அவர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து முதல் கட்​ட​மாக பிரபுமணி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிந்​தனர். தொடர்ந்து அவர் கைது செய்​யப்​பட்​டார்.

இந்நிலையில் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஷீலா மேரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார்.நீதிமன்ற விசாரணையின் போது முன் ஜாமின் மனுவுக்கு காவல்துறை தரப்பில் பலத்த எதிர்ப்பு.ஷீலா மேரிக்கு முன்ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை வாதம்.

இந்நிலையில், பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!