Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாரியம்மன் கோவில் திருவிழாவில் வெடி வெடித்து சிதறியதில் 20 பேர் காயம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 20 பேர் காயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை குச்சிபாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்று மாலை கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. கோவில் அருகே அருகில் பட்டாசு மற்றும் நாட்டுவெடி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரவில் சாமிக்கு படைக்கும்போது அருகில் இருந்த பட்டாசு மற்றும் நாட்டுவெடியில் தீ பட்டுள்ளது. இதனால், அந்த வெடிகள் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தின்போது, கோவில் திருவிழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடினர்.
எனினும், திருவிழாவில் வெடி வெடித்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் பலர் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். வெடி வெடித்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

error: Content is protected !!