Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

சென்னைக்கு வேலை தேடி வந்த 5 புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநர்களை அணுகியுள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் கூறிய இடத்திற்குச் செல்லாமல், அவர்களை ஏமாற்றி வேறு ஒரு பகுதிக்குக் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு வைத்து தொழிலாளர்களை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர்கள், சவாரி கட்டணமாக ரூ.7500 கேட்டு மிரட்டியுள்ளனர். தாராளமாகப் பணம் இல்லாததால் தவித்த தொழிலாளர்களை, அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் வேலைக்கு ஆள்சேர்க்கும் ஏஜென்சியில் (Job Consultancy) கொண்டு போய் விட்டுள்ளனர். அங்கு அந்த ஏஜென்சியிடம் இருந்து ரூ.8500-ஐ வாங்கிக் கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து செயல்பட்ட காவல் துறையினர் குற்றச் செயலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!