Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாரியம்மன் கோவில் விழா- ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வினோத வழிபாடு

கரூர் மாரியம்மன் கோவில் விழா- ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வினோத வழிபாடு

கிருஷ்ணராயபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆட்டுத்தலையை ஈட்டியால் குத்தி வழிபடும் வினோத நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 14ஆம் தேதி கம்பம் ஊன்றுதலுடன் திருவிழா துவங்கியது.

அதனைத் தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி காவிரி ஆற்றில் கரகம் பாலிக்கப்பட்டு அம்மன் தூக்கு

தேர் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆட்டு தலையை ஈட்டியல் குத்தும் வினோத நிகழ்வும் நடைபெற்றது. பிச்சம்பட்டி, வலையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சல்லை எனப்படும் 10 முதல் 15 அடி உயரம் அல்ல ஈட்டியை எடுத்துக்கொண்டு தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

கோவிலில் அம்மனுக்கு ஆட்டுக்குட்டியை பலியிட்ட பின்னர் ஆட்டின் தலையை எடுத்துக்கொண்டு வந்து கோவில் முன்பு இளைஞர்கள் மத்தியில் வானத்தை நோக்கி மேலே வீசுவர். அப்போது இளைஞர்கள் ஈட்டியல் அந்த ஆட்டின் தலையை குத்தி எடுத்து கோவிலை மூன்று முறை வலம் வர வேண்டும். இதில் பிச்சம்பட்டியை சேர்ந்த சசிகுமார் 26. என்ற இளைஞர் ஆட்டின் தலையை ஈட்டியால் குத்தி கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார்.

வெற்றி பெற்ற அவருக்கு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்ட மாலை அணிவிக்கப்பட்டு தாரை, தப்பட்டைகள் முழங்க ஊர் மரியாதை உடன் வழி அனுப்பி வைத்தனர்.

முன்பு பிச்சம்பட்டி வலையார்பாளையம் பகுதிகளில் கோவில் விவசாய நிலங்களை காக்க யார் முன் வருவது என்று இரு ஊரைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்சனை எழுந்தபோது ஆட்டுத்தலையை ஈட்டியல் குத்தி கோவிலை மூன்று முறை எந்த ஊரைச் வலம் வருகிறாரோ அவர்களுக்கு கோவில் நிலங்களை காக்க அந்த ஆண்டு உரிமம் வழங்கப்படும். அதுவே பின்பு காலப்போக்கில் மாறி திருவிழாவில் தொடர்ந்து வரும் நடந்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று அக்னி சட்டி எடுத்தல் அழகு குத்துதல் கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

error: Content is protected !!