திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருச்சி – அரியலூர் வழித்தடத்தில் திடீரென ரயிலில் ஏறிய மேலாளர், பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளின் செயல் திறன்களை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ரயில்வே மூத்த பொறியாளர், மூத்த வணிக மேலாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
