Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி..

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இன்று (ஜூலை 5) காலை முதல் சீரானது. இதையடுத்து, மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. வார விடுமுறை தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் தங்களது குடும்பங்களுடன் குவிந்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

error: Content is protected !!