கரூரில் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வருகையை முன்னிட்டு உற்சாக வரவேற்பளிக்க காலை முதல் காத்திருக்கும் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் நிர்வாகிகள் இன்னும் சற்று நேரத்தில் விழா மேடைக்கு உள்ளே செல்ல உள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது.
கரூருக்கு இன்று வருகை தர உள்ள தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்

அதற்காக 6,500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
கரூர் வெண்ணைமலை அருகே உள்ள அட்லஸ் கலையரங்க தனியார் மைதானத்திற்கு மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் ஆன ஜோசப் விஜய் வருகை தர உள்ள நிலையில் வரவேற்பு அளிக்கும் விதமாக கரூர் முக்கிய சாலைகளில் கட்சி கொடிகள் பேனர்கள் வைக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிப்பதற்காக காத்துக் கொண்டுள்ளனர்
மேலும் ஆண்கள், பெண்கள் என காலை முதலே வரிசையில் நின்று வருகின்றனர்
இன்று காலை 11 மணிக்கு மேல் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல்வர்

பின்னர் மதியம் மூன்று மணி அளவில் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்
இதற்காக 6500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
பவுன்சர்கள் காவல்துறையினர் என மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்கும் நபர்களை ஒவ்வொருவராக சோதனைக்குப் பிறகு ஒன்பது மணி அளவில் விழா மேடைக்கு உள்ளே அனுமதிக்க உள்ளனர்
QR கோடுடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்த பிறகு வரிசையாக உள்ளே அனுமதிக்க உள்ளனர் இதில் 5000 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர் அவர்களுக்கு தேவையான தின்பண்டங்கள் குடிநீர் பாட்டில்கள் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது காலை முதல் காத்திருக்கும் பொதுமக்கள் இன்னும் சற்று நேரத்தில் விழா மேடைக்கு உள்ளே செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
41 பேர் மரணத்திற்கு பிறகு முதல்வராகிய பிறகு இன்று கரூர் வரகை தரவுள்ள தமிழக முதல்வர் விஜயை காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவர் என்ன பேச போகிறார் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விழா நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள 3 தனியார் பள்ளிகள் ஒரு கல்லூரி என மூடப்பட்டுள்ளது
அங்கிருக்கும் தனியார் குடியிருப்பு பகுதிகள் உள்ள பொதுமக்கள் காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வெளியே வரக்கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
