திருச்சி, புலிவலம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மண்புழு உரக்கிடங்கு உப்பட்ரு
காவிரி ஆற்றல் படுகையில் அமைந்துள்ளது. இதன் காவலாளியாக செல்லப்பா பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிகள் முடிந்து உரக்கிடங்கு கேட்டை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது,
உரக்கிடங்கு கேட் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 15 ஹெச்பி எலக்ட்ரிக் மோட்டாரை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து பஞ்சாயத்து செயலர் அகிலாண்டேஸ்வரி புலிவலம் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டாரை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்
