சென்னை தேனாம்பேட்டை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் நெஞ்சை பதறவைக்கும் விபத்து நடந்துள்ளது. 3-வது மாடியில் வசிக்கும் பெண் ஒருவர், பால்கனியில் துணிகளை எடுக்க முயன்றபோது திடீரென பால்கனி சுவர் இடிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் 3-வது மாடியில் இருந்து தலைகீழாக கீழே விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3வது மாடியில் துணி எடுக்க முயன்ற பெண் தவறி விழுந்து படுகாயம்
