பிரபல இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது அடுத்த புதிய ஆல்பம் பாடலுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த புதிய ஆல்பத்தில் சாய், பிரபல நடிகை மமிதா பைஜு இணைந்து நடனமாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்யுக்தா, பிரீத்தி முகுந்தன் ஆகியோரை தொடர்ந்து மமிதா பைஜுவுடன் சாய் அபயங்கர் கூட்டணி அமைப்பதால், இந்த ஆல்பம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தற்போதே பல மடங்கு அதிகரித்துள்ளது.
