Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்யக் கோரி- விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்u முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கைகளில் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய அவர்கள், விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய விவசாய சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி, கரூரில் விவசாயிகளை கைவிட மாட்டோம் என முதலமைச்சர் பேசினார்.இது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அதே வேளையில் கூட்டுறவு நிறுவனங்களில் பெற்றுள்ள அனைத்து விவசாய கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக ரத்து செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

error: Content is protected !!