Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

கேரளா குன்னும்புரத்தை சேர்ந்தவர் முனீர். இவரது மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது.

மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும், குடும்பத்தினர் அந்த குழந்தையை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அக்குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. மூச்சுத் திணறிய நிலையில் குழந்தை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

recommended by

பின்னர் அந்த குழந்தை மஞ்சேரி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு உடற்கூராய்வு செய்யப்பட்டு, அவனது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!