தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெக.) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் வீரா. மாம்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நவீன் என்ற ஒப்பந்ததாரரால் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவடைந்த பணிக்கான நிலுவைத் தொகையை (Bill Pass) விடுவிப்பதற்காக, ஊராட்சி மன்றத் தலைவர் வீரா ஒப்பந்ததாரர் நவீனிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒப்பந்ததாரரிடம் இருந்து வீரா லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் வீடியோ மற்றும் ‘ஜிபே’ (G Pay) மூலம் பெறப்பட்ட பண பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாக பரவிவருகின்றன. அரசுப் பணிக்கான பில்லை விடுவிக்க த.வெ.க நிர்வாகியும் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரா லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
