திருச்சி சிங்காரத்தோப்பு தனியார் மதுபான பார் அருகில் அரசு அறிவித்த நேரத்தை காட்டிலும் கூடுதலாக மது பார் அருகில் விற்பனை செய்து வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்த பொழுது லால்குடி பகுதியை சேர்ந்த ஸ்டான்லி காட்வின் (வயது 35) சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (வயது 55) கலெக்டர் அலுவலக சாலையைச் சேர்ந்த சுரேஷ் (வயது 42) மணப்பாறையை சேர்ந்த பிரபுதேவா (வயது 23) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
டிப்பர் லாரி மோதி ஒருவர் சாவு..
திருச்சி கூத்தூர் பாண்டமங்கலம் மாரியம்மன் கோவில் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் வயது 41 இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில்இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதி பலத்த காயமடைந்தார்.இதை எடுத்து ஆபத்தான நிலையில் அமிர்தலிங்கம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கு சிகிச்சை பெற்று வந்த அமிர்தலிங்கம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
