மதுரை பெத்தானியாபுரம் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நாகரீகமற்று, சந்தைக்கடை போல பேசுவதாக விமர்சித்திருந்தார். மேலும், ‘புலி’ பட விவகாரத்தில் வரி ஏய்ப்பு செய்து அபராதம் கட்டியவர் மற்றவர்களை விமரிசிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசிய செல்லூர் ராஜு மீது கைது நடவடிக்கை எடுக்க கோரி, தவெக வழக்கறிஞர்கள் மாநகர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
