நிசான் நிறுவனம் தனது புதிய Tekton மிட்சைஸ் SUV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Patrol-ஐ நினைவூட்டும் வடிவமைப்பு, 10.1 அங்குல டச் ஸ்கிரீன், Google ஆதரவு தொழில்நுட்பம், Level-2 ADAS, 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 1.0 லிட்டர் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வுகளுடன் வரும் இந்த SUV, Bharat NCAP-ல் 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.
குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்
